தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி சான்றிதழ்: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்ற பெண் கைது - woman arrested for receiving disabled id card

போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை பெற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பெண் கைது
பெண் கைது

By

Published : Jun 9, 2022, 7:38 PM IST

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் மற்றும் அரசு நிர்ணயம் செய்து இருப்பதை விட சிலர் போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பெயர் பட்டியல் உடன் புகார் அளித்துள்ளார்.

எஸ்வி ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பெயர் பட்டியலில் உள்ள குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியைச் சேர்ந்த நவநீதம் (38) இடைத்தரகர்கள் மூலம் போலியான மருத்துவச் சான்றிதழ் வழங்கி, தேசிய அடையாள அட்டை பெற்றது தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் புகாருக்குள்ளானவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆளுநரின் பாதுகாப்பு பணி: பெண் போலீஸ் மயக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details