தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ரூ. 2500 பரிசு' - நிலோபர் கபில் - அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2500

திருப்பத்தூர்: கரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்ததை உணர்ந்த முதலமைச்சர், தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2500 வழங்கப்படுவதாக அறிவித்தார் என அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

நிலோபர் கபில்
நிலோபர் கபில்

By

Published : Dec 27, 2020, 12:18 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர், சென்னாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை மூலம் கட்டுமான வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. அதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டார்.

அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள 17 வகையான திட்டங்கள் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி நலவாரியத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டார்.

நிலோபர் கபில்

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிலோபர் கபில், கரோனா காலகட்டத்தில். தமிழ்நாட்டு மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்ததை உணர்ந்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்தார். எப்போதும் ஏழை, எளிய மக்கள் மீது அதிமுக அரசுக்கு அக்கறை உள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details