தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் - wife dead after husbands death in tiruppatur

திருப்பத்தூர்: கணவர் இறந்த செய்தி கேட்டு அவரது சடலத்துக்கு அருகிலேயே மயங்கி விழுந்து மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

wife-dead-after-husbands-death-in-tiruppatur
wife-dead-after-husbands-death-in-tiruppatur

By

Published : Apr 30, 2021, 10:47 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்பேட்டை பகுதியில் உள்ள குப்புசாமி தெருவில் வசித்து வந்தவர் அண்ணாமலை (80). இவரது மனைவி லட்சுமி அம்மாள் (70). இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஜவுளி வியாபாரியான அண்ணாமலை தனது மகன், மகள், பேரப்பிள்ளைகள் என தனது குடும்பத்தினரோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில நாள்களாக அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இன்று காலை உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு லட்சுமி அம்மாள் அவரது சடலத்தின் அருகிலேயே மயங்கி விழுந்தார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திண்டுக்கலில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details