திருப்பத்தூர்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி - பழங்கள், மளிகைப் பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குடிமகன்கள் சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாரயம் ஆகியவைகளை நாடி வருகின்றனர்.
மதுவிற்ற 10 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மது விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுவிற்பனைக்கு வாட்ஸ் அப்
இந்தநிலையில், வாணியம்பாடியில் குடிமகன்களின் தேவையை தீர்க்க, நண்பர்கள் இருவர்,சரக்கு என்ற வாட்ஸ்அப்குழுவை உருவாக்கி உறுப்பினர்கள் சேர்த்து, மதுவிற்பனை செய்து வந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன்(25), நியூ டவுன் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சரவணன்(24). இவர்கள் இருவரும் இந்த குழுவில் சுமார் 150-க்கும் அதிகமானவர்களை இணைத்து, அதன் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மது விற்பனை செய்து வந்துள்ளனர்.