தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி - நடந்தது என்ன? - ஆம்பூர் மருத்துவமனை

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காவலாளி சிகிச்சை அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

a
s

By

Published : Dec 6, 2022, 5:10 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு உடல் நலக்குறைவுக் காரணமாக மோதகபள்ளி கிராமத்தை சேர்ந்த சாரங்கபாணி என்ற நபர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுரேஷ் என்ற காவலர் சாரங்கபாணிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிளா தேவி (MO) அவர்களை ஈடிவி பாரத் தமிழ் செய்தியாளர், தொடர்பு கொண்டு பேசியபோது, "இந்த சம்பவம் இது இரவில் நடந்துள்ளது. இதற்கான விளக்கத்தை மருத்துவமனை தலைமை செவிலியர் இடம் கேட்டுள்ளேன். தகவல் வந்த பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்படும். விடுமுறையில் இருப்பதால் பணிக்கு வந்தவுடன் உரிய விசாரணை நடத்த உள்ளேன்" இவ்வாறு கூறினார்.

a

ஆம்பூர் அரசு மருத்துமனையில் போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை என பொதுமக்கள் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அணிகள் 4 ஆனால் முழக்கம் ஒன்று.. அதிமுகவில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details