தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி! - people grievance meeting during corona period

திருப்பத்தூர்: ஆம்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமை ஏற்றார்.

people grievance meeting
மக்கள் குறைதீர் கூட்டம்

By

Published : Oct 21, 2020, 7:53 PM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் இக்கூட்டத்தினை நடத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று (அக்.21) ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மக்களுக்கான குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைப்பெற்றது.

இக்குறைத்தீர்வு கூட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சுமாராக 5 லட்சத்து 31 ஆயிரத்து 279 ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நாற்காலி, நடை வண்டி, முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கைகள், பார்வையற்றோருக்கான மடக்கும் குச்சி, கருப்பு கண்ணாடி, 18 வகையான மளிகை பொருள்கள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இக்கூட்டத்தில் வைத்து கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஆம்பூர் நகராட்சி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களை ஊக்குவித்தார்.

மக்கள் குறைதீர் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் வாணியம்பாடி கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணியம், ஆம்பூர் வட்டாச்சியர் பத்மநாபன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அரை மணி நேரத்தில் முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கிய ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details