தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வசீம் அக்ரம் கொலை வழக்கு - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது! - வசீம் அக்ரம் கொலை வழக்கு

வசீம் அக்ரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கூலிப்படையை சேர்ந்த முக்கிய நபரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Waseem Akram murder case
Waseem Akram murder case

By

Published : Nov 9, 2021, 12:57 PM IST

திருப்பத்தூர் : ஜீவா நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி கஞ்சா பதுக்கல் கும்பலால் முன்னாள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மண்ணிவாக்கம் வண்டலூர் பகுதி கூலிப்படை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி டெல்லி குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

டெல்லி குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் டெல்லி குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இதுவரையில் 21 பேர் கைதாகியுள்ள நிலையில், ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதையும் படிங்க : ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!

ABOUT THE AUTHOR

...view details