தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலருக்கு பிடிவாரண்ட் - நாட்றம்பள்ளி காவல் நிலையம்

வாணியம்பாடியில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலருக்கு குற்றவியல் நீதிமன்ற கூடுதல் பொறுப்பு நீதிபதி ரவி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலருக்கு பிடிவாரண்ட்
பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலருக்கு பிடிவாரண்ட்

By

Published : Jul 3, 2022, 9:20 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி கச்சேரி சாலையை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பெண் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் அவர் அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து அப்பெண் கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இது குறித்து கடந்த 8.06.2020 அன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவலர் அண்ணாமலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

மேலும் மேகலா வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக காவலர் அண்ணாமலையை நீதிமன்றத்தில் ஆஜராக 2 முறை சம்மன் அனுப்பியும் அதனை பெற மறுத்த காவலர் அண்ணாமலைக்கு வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற கூடுதல் பொறுப்பு நீதிபதி ரவி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடுரோட்டில் சில்மிஷம் - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details