கடந்த சில நாள்களாக ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் குப்பம் பகுதியில் உள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பிவருகிறது. ஏரியின் மதகில் வெளியேற்றப்படும் நீரானது, ஆந்திராவில் உள்ள காட்டாற்று வழியாகப் பாலாற்றில் கலக்கிறது.
இதனால், வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. அதன்படி உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் உதயேந்திரம், மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்குத் தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கைவிடப்பட்டது.