திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள், குலுக்கல் முறையில் அந்தந்த தொகுதிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்படுகின்றன.
காவலர்களின் பாதுகாப்புடன் வாணியம்பாடி சென்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - thirupathur district news
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள 359 வாக்குச் சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
வாணியம்பாடி சென்ற மின்னணு வாக்கு இயந்திரங்கள்
இந்நிலையில் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 359 வாக்குச்சாவடி மையங்களுக்குப் பயன்படுத்த உள்ள 434 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவலர்களின் பாதுகாப்போடு அம்மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது உதவி தேர்தல் அலுவலர் மோகன், தேர்தல் உதவியாளர் மகேந்திரன் உள்பட தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.