நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் சென்று, ஜாப்ராபாத் பகுதியில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பி, உதயேந்திரம் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் வீணாகி கொண்டிருந்தது.
இதைப் பார்த்த வேர்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, மணல் மூட்டைகளைக் கொண்டுசென்று பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுவரும் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன்பேரில், பொதுப்பணித் துறையினரும் மணல் மூட்டைகளைத் தயார்செய்து தடுப்பணையைத் தற்காலிகமாக அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தன்னார்வலர்களின் இப்பணியை அப்பகுதி மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் கே.சி. வீரமணி