சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சரத்குமார் கரோனாவிலிருந்து மீள பால்குடம் எடுத்த தொண்டர்கள்! - சரத்குமாருக்கு கரோனா
திருப்பத்தூர்: கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பூரண குணம் அடைய வேண்டி அக்கட்சியினர் தேவாலயம், தர்கா மற்றும் கோயில்களில் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
![சரத்குமார் கரோனாவிலிருந்து மீள பால்குடம் எடுத்த தொண்டர்கள்! சரத்குமார் கரோனாவிலிருந்து மீள சிறப்பு வழிபாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9848402-thumbnail-3x2-sarath.jpg)
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சரத்குமார் கரோனாவிலிருந்து பூரண குணமடைய வேண்டி வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் உள்ள தர்காவிலும், புதூர் பகுதியிலுள்ள தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் வாணியம்பாடி அடுத்த புற்றுக்கோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அங்குள்ள புற்றுமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதையும் படிங்க: வெளியானது அதர்வாவின் 'குருதி ஆட்டம்' டீசர்