தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச செல்ஃபோன் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - protest and demanding free mobile phone

இலவச செல்ஃபோன் வழங்க கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலவச செல்போன் வழங்க கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
இலவச செல்போன் வழங்க கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

By

Published : Jan 26, 2021, 2:41 PM IST

தமிழ்நாடு அரசு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆன்ட்ராய்டு செல்ஃபோன் வழங்குவதாக அறிவித்தது.

அதனை வழங்க கோரி சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலை ஏலகிரி வளாகத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று இரவு முதல் (25.01.2021) தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழ்நாடு அரசு அறிவித்த இலவச ஆன்ட்ராய்டு செல்ஃபோன் வழங்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நோயாளிகள், மருத்துவர்களிடமிருந்து 42 செல்ஃபோன்கள் திருட்டு! - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details