தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தரமற்ற சாலை' - ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட கிராம மக்கள்! - Thirupathur news

திருப்பத்தூர்: மலை கிராமத்திற்கு செல்லும் சாலை தரமற்ற முறையில் போடப்படுவதாக குற்றஞ்சாட்டி ஒப்பந்ததாரரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

By

Published : Feb 18, 2020, 8:28 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் பனங்காட்டேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் அன்றாட தேவைக்கு தினமும் ஆம்பூர் வரும் சூழல் உள்ளது.

இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆம்பூரிலிருந்து பனங்காட்டேரி மலைகிராமத்திற்கு தார் சாலை போடப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளிலேயே ஆங்காங்கே சாலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாலை ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

இந்நிலையில், தற்போது அரசாங்கம் ரூ. 92 லட்சம் நிதி ஒதுக்கி ஆம்பூர் முதல் பனங்காட்டேரி கிராமம்வரை தார் சாலை போட சேலத்தை சேர்ந்த கோபி என்பவரிடம் ஒப்பந்தம் செய்தது. ஆனால், பனங்காட்டேரியில் தற்போது அமைத்து வரும் தார் சாலை தரமற்றது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதில், மத்திய அரசு கூறிய 22மி.மீ பதிலாக ஒப்பந்தகாரர்கள் வெறும் 5 மி.மீ அளவுதான் போட்டுள்ளார்கள் என்று மத்திய அரசின் அரசாணையை தங்களிடம் காண்பிக்குமாறு ஒப்பந்தகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - ஜெயக்குமார், ஓம் காந்தனை மேலும் 2 வழக்குகளில் கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details