திருப்பத்தூர்: அனேரி கிராமத்தில் பல வருடங்களாக திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் இருந்து அனேரி கிராமத்திற்கு செல்லும் அடிப்படை சாலை வசதி இல்லாமல் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக குண்டும் குழியுமாக உள்ளது.
சாலை வசதி வேண்டி ஊர் மக்கள் நாற்று நட்டு நூதனப் போராட்டம்!
திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை வசதி வேண்டி சாலையில் நாற்று நட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதனை சீரமைத்து தரக்கோரி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையுடன் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக நிர்வாகி அனேரி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திருப்பத்தூர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிலம்பரசன், ஒன்றிய விவசாய சங்க தலைவர் வீரராகவன், இளைஞரணிச் செயலாளர் திருப்பதி ஆகியோருடன் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் லாரியில் முன் சக்கரம் முறிந்து விபத்து; வாணியம்பாடியில் மூவர் படுகாயம்!