தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2022, 9:12 PM IST

ETV Bharat / state

பட்டா வேண்டி 3 நாள்களாக நடத்திய போராட்டத்தை கைவிட்ட மலைக்கிராம மக்கள்!

வாணியம்பாடி அருகே 3 நாள்களாக பட்டா வேண்டி மலைக்கிராம மக்கள் நடத்திவந்த போராட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அலுவலர்கள் பேச்சு வார்த்தைக்கு பின்பு கைவிடப்பட்டது.

3 நாட்களாக பட்டா வேண்டி மலைகிராம மக்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது
3 நாட்களாக பட்டா வேண்டி மலைகிராம மக்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ளது தும்பேரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகர் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 19 குடும்பத்தினர் மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பட்டா வழங்க வேண்டி, நேற்று (மே27) முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2 நாள்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

3 நாட்களாக பட்டா வேண்டி மலைகிராம மக்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது

இந்த நிலையில், இன்று (மே29) காலை போராட்டம் செய்து வந்த இடத்திலேயே உணவு தயார் செய்து தமிழ்நாடு-ஆந்திரா செல்லும் சாலையில் அமர்ந்து உணவு உட்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். விரைந்து வந்த வன துறையினர் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் செந்தில்குமார் போராட்டக்காரர்கள் இடையே கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விஜயன் ஆகியோர், இது வனத்துறைக்கு சொந்தமான இடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி தெரிவித்தனர்.

பின்னர் அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றபோது, அப்பகுதியை சேர்ந்த சிவராஜ் என்ற இளைஞர் திடீரென்று தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள காப்புக்காடு பகுதியில் மலை உச்சியில் ஏறிக் கொண்டு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் தீயணைப்புத்துறையினர் அனைவரும் மலை உச்சியில் ஏறிய இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞரை கீழே அழைத்து வந்தனர்.

மேலும் பட்டா வழங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் கிராம மக்களிடம் உறுதி அளித்ததின் பேரில் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு!

ABOUT THE AUTHOR

...view details