திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலம் மற்றும் 3 வீட்டு மனையை அளவிடுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், சேகரை டிசம்பர் மாதத்தில் நில அளவை குறித்து நேரில் அழைத்து பேசியுள்ளார் ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரியும் பாலாஜி. இதனை தொடர்ந்து சேகரிடம் பாலாஜி நான்கு இடங்களுக்கு சேர்த்து ரூ.12,000 லஞ்சம் கேட்டுள்ளார்.