தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் அடாவடியாக பணம் வசூல் செய்யும் காவலர் - வைரல் காணொலி - Tirupathur district news

திருப்பத்தூர்: இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடம் அடாவடியாக காவலர் பணம் வசூல் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலரின் காணொலி
காவலரின் காணொலி

By

Published : Oct 7, 2020, 3:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம், தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி நாள்தோறும் காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலரின் காணொலி

இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து காவலர் அதியமான் என்பவர் அபராதத்திற்கான ரசீது கொடுக்காமல் பணம் கேட்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "நான் அப்படிதான் அபராதம் விதிப்பேன். உன்னால் என்ன பண்ண முடியும்" என காவலர் பேசியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாகனத் தணிக்கையில் ஏற்பட்ட மோதல்... உயிரை மாய்த்துக்கொண்ட திருநங்கை!

ABOUT THE AUTHOR

...view details