தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக சொத்து பட்டியல் என நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை" - வேல்முருகன் விமர்சனம் - the Election Commission in

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட சொத்து பட்டியலை வைத்து நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தான் ஆடியோ விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 23, 2023, 7:30 PM IST

திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளிடுவதாக கூறிய அண்ணாமலை அதை வெளியிட்டால் விவாதிக்கலாம் - வேல்முருகன்

திருப்பத்தூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏலகிரி மலையில் இன்று (ஏப்.23) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் சிறப்பு தீர்மானமாக தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, வழங்கப்பட வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதான கோரிக்கையாகும் என்றார்.

மேலும் பேசிய அவர், உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு அவர்கள் கோரிய அந்த புள்ளி விவரங்கள் தரவுகள் அடிப்படையில், ஒரு சட்டம் இயற்றி 10.5% இந்த கல்வியாண்டிலேயே போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் வேண்டுகோளை முன்வைத்து கவனம் ஈர்த்து பேசியதாக கூறினார்.

இதையே தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்தார். அதே போன்று, 8 மணி நேர வேலை என்பது நெடுங்காலம் போராடி பெற்ற உரிமை ஆகும். பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்ற 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை ஒன்றிய அரசு 2020ஆம் ஆண்டு தொழிற்சாலை பாதுகாப்பு என்ற சட்டத்தை கொண்டு வந்தது.

அதேபோன்று, ஒரு சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சரும் கொண்டு வந்தார்கள். முதலமைச்சரை சந்தித்து, இந்தச் சட்டம் மிக மோசமான சட்டம், தொழிலாளர் உரிமையைப் பறிக்கின்ற சட்டம் என்றும்; அதனால், இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தாகவும் கூறினார்.

ஆனால், அந்த சட்டம் நிறைவேறியிருக்கிறது. கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனையை ஏற்று இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதே போன்று, என்.எல்.சி-க்கு வீடு, நிலம் கொடுத்த மக்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 1 கோடி ரூபாயும், வீட்டுக்கொருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்றும்; அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், நாங்கள் தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாகவும், இதே கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், எந்தெந்த கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை திமுக முடிவு செய்யும் என்றார்.

மேலும், நிதி அமைச்சரின் குரல் என்று ஒரு ஆடியோ வெளியாகிய விவகாரத்தில், அது குறித்து நிதி அமைச்சர் ஒரு வெளிப்படையான அறிக்கையை அவர்தான் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பல ஆண்டுகளாக வெளியிட்ட சொத்துபட்டியலை காப்பியடித்து திமுகவினர் சொத்து பட்டியல் என ஐ.பி.எஸ்ஸில் வென்ற பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக சாடினார்.

’அவர் சொன்னது ஊழல் பட்டியல், திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் அதைப் பற்றி பேசலாம், தேர்தலில் நிற்கும். அதை திமுகவினரும் தனக்கு எவ்வளவு சொத்து இருப்பு விவரத்தை அளித்திருக்கின்றனர். அதை டவுன்லோட் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்’ என்றார்.

மேலும், இந்த இரண்டு ஆண்டுகள் காலத்தில் தமிழகத்தில் மக்கள் அச்சப்படக்கூடிய அளவில் சாதி மோதல்கள் ஊரடங்குகள் ஏதும் ஏற்படவில்லை எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பாமக பற்றி எந்த கருத்தும் இல்லையென தெரிவித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details