தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரம் சரிந்து விழுந்து விபத்து: சிகிச்சைப்பெற்று வந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு! - மின்சாரத் துறை

வேலூர் அருகே மரம் விழுந்து படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பெற்று வந்த தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரம் சரிந்து விழுந்து விபத்து
மரம் சரிந்து விழுந்து விபத்து

By

Published : Aug 9, 2022, 9:29 PM IST

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி மத்தூர் பகுதியைச்சேர்ந்தவர், வெங்கடேசன்(48). மின்சாரத்துறையில் பணிபுரியும் இவர், தனது மகன் கோபியுடன்(22) பரதராமி மத்தூர் கிராமத்திற்கு கடந்த 4ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடியாத்தம் அடுத்த ராமாலை, தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன், மகன் கோபி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தந்தை வெங்கடேசன்(48) சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த மகன் கோபிநாத்தும் இன்று(ஆக.09) சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தாய் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மகள் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details