திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் எஷானுல்லா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு முன்பு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்து எலக்ட்ரிக் பைக்கை முகப்பில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்த பைக் அதிகாலையில் திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.
புகை வெளியேறுவதை உணர்ந்த எஷானுல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் வீடு முழுவதும் புகை படர்ந்துள்ளது.இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து கூச்சலிட்டனர். இந்த சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, மணலை கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளனர்.