தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி விற்பனையாளர் திடீர் உயிரிழப்பு - காய்கறி விற்பனையாளர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காய்கறி விற்பனையாளர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

thiruppattur
thiruppattur

By

Published : Apr 16, 2020, 11:41 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விவாசாயிகளிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல்செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள் பொதுமக்களுக்குப் பார்சல்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, ஆலங்காயம் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் உமாபதி என்பவர் காய்கறிகளை விற்பனைசெய்ய அங்கு வந்திருந்தார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனை

அதையடுத்து அவர், அலுவலர்கள் முன்னிலையில் காய்கறிகளை எடை போட்டுக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்த வாணியம்பாடி காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:தள்ளுவண்டி மூலம் வீதிவீதியாக காய்கறி விற்பனை

ABOUT THE AUTHOR

...view details