திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வருகின்ற 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் சார்பில் நீலச்சட்டை பேரணி நடத்தப்படும் என அறிவிப்பு பேனர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதனை அதே பகுதியை சேர்ந்த சிலர் கிழித்துள்ளனர் என்பது தெரியவந்தள்ளது. பின்னர் இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் மீண்டும் அதே இடத்தில் புதிய பேனரை ஒட்டவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பேனரை கிழித்தது குறித்து புத்துகோவில் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் கௌதம் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி கைதான இருவரின் உறவினர்கள் புத்துகோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.