திருப்பத்தூர்:வாணியம்பாடி வாரச்சந்தை நடைபாதை வியாபாரிகளிடம் திடீரென அரை நிர்வாணத்துடன் வந்த குடிபோதை ஆசாமி ஒருவர் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாச வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் பெண்களிடம் ரகளையில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. அதே பகுதியில் அரை நிர்வாணத்துடன் சுமார் அரை மணி நேரம் ரகளையில் ஈடுபட்டார்.