திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பவுன், ராஜாகுமாரி. இவர்கள் தங்களது விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை வாணியம்பாடி உழவர் சந்தையில் விற்பனை செய்து விட்டு செக்குமேடுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.
டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு - tirupattur district news in tamil
வாணியம்பாடி அருகே உழவர் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் காய்கறி ஏற்றி வந்தவர்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாணியம்பாடி- ஆலங்காய் செல்லும் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது பின்புறமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், பவுன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜகுமாரி படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநர் விஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தாம்பரம், செல்போன் திருடிய இளைஞர் கைது