கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய சிறைக்காவலர்கள் - Corona
திருப்பத்தூர்: வாணியம்பாடி சிறைக்காவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிறைக் காவலர்கள் சார்பில் கரோனா பரவவல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிறைத் துறை தலைவர் டிஜிபி சுனில் குமார் சிங் பரிந்துரையின்பேரில், வாணியம்பாடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சையத் அமிர் (பொறுப்பு) தலைமையில் வாணியம்பாடி கிளைச் சிறையில் இருந்து கச்சேரி சாலை, வாரசந்தை காய்கறி மார்க்கெட் வரை இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியின் போது நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசம், சானிடைசர், கையுறைகள் வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.