தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு ஆந்திர எல்லையில் சந்திரபாபு நாயுடுக்கு வரவேற்பு - ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு வரவேற்பு

தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்று, வாணியம்பாடி அனைத்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு அளித்தது.

வாணியம்பாடி தமிழ்நாடு ஆந்திர எல்லையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு வரவேற்பு
வாணியம்பாடி தமிழ்நாடு ஆந்திர எல்லையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு வரவேற்பு

By

Published : Jan 6, 2022, 9:36 PM IST

திருப்பத்தூர்:சந்திரபாபு நாயுடு இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குப்பம் தொகுதியில் உள்ள நான்கு மண்டலங்களில் கிராமப்புற மக்களைச் சந்திக்க உள்ளார்.

பின்னர் குப்பம் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். இவர் முன்னதாக பெங்களூருவிலிருந்து வாணியம்பாடி வழியாக தமிழ்நாடு, ஆந்திரா மாநில எல்லையையொட்டி அண்ணா நகர் சோதனைச்சாவடி வழியாகச் சென்று, ராம குப்பம் மண்டலம் தேவராஜ்புரம் பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறார்.

சந்திரபாபு நாயுடுக்கு வரவேற்பு

இவருக்கு வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச் சாலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சந்திரபாபு நாயுடுவிடம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “கடந்த முறை நீங்கள் (சந்திரபாபு நாயுடு) முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கிருஷ்ணா நதியிலிருந்து மூன்று டிஎம்சி நீரைக் கொண்டுவந்து குப்பம் தொகுதியில் அந்திரி நிவா திட்டத்தில் கால்வாய் வெட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்க தயாராக உள்ளது.

அதில் ஐந்து டிஎம்சி நீரை கொண்டுவந்து இரண்டு டிஎம்சி நீரை பாலாற்றில் விட வேண்டும் என்றும், வாணியம்பாடியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் விஜிலாபுரம் என்ற இடத்தில் இடத்தைத் தேர்வுசெய்து விமான நிலையம் அமைக்க 98 கோடி நிதி ஒதுக்கி, 1200 ஏக்கர் நிலத்தை வாங்கி தற்போது கிடப்பில் உள்ள அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தால் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கையூட்டு கேட்கும் ஒப்பந்த ஊழியரின் காணொலி வைரல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details