தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தைச் சூழ்ந்த மழை நீர் - நோயாளிகள் அவதி! - Vaniyambadi News

வாணியம்பாடியில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இதனால், நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 20, 2022, 1:36 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்று வருகின்றனர்.

கணவாய்புதூர் ஏரியிலிருந்து பாலாற்றிற்கு உபரி நீர் செல்லக்கூடிய ஏரிக்கால்வாய், கோவிந்தபுரம் மற்றும் நூருல்லாப்பேட்டை பகுதியில் மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதால், கால்வாயில் நீர் செல்ல முடியாமல் சாலையிலும் மருத்துவமனை வளாகத்திலும் நீர் சூழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா அரசு மருத்துவமனை மற்றும் அதன் முன்பாக சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்பினை அகற்ற முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தைச் சூழ்ந்த மழை நீர் - நோயாளிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details