தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் 86 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் இதுவரை சிகிச்சை பெற்று வந்த 507 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இந்த வைரஸால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 1,109 பேர் பரிசோதனை முடிவிற்கு காத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ஒரே நாளில் 522 மருத்துவ முகாம்கள்!