தமிழ்நாடு

tamil nadu

நாங்கள் எந்த ஈடி சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jul 18, 2023, 7:52 AM IST

எடப்பாடியோ, ஓ.பன்னீர்செல்வமோ எங்கள் தலைவர் இல்லை என்றும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் எங்கள் தலைவர் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

in tirupathur program Minister Udhayanidhi Stalin said at DMK is not afraid for ed raids
நாங்கள் எந்த ஈடி சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாங்கள் எந்த ஈடி சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருப்பத்தூர்: நேற்று (ஜூலை 17) காலை முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக கழஜ மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் திமுகவைச் சேர்ந்த 200 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இங்குள்ள பெரியோர்களை பார்க்கும்போது கருணாநிதியைப் பார்ப்பதுபோல் தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்வதற்கு முக்கிய காரணம் நீங்கள்தான். தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிசாவை பார்த்தவர்கள், இந்த ஈடி சோதனைக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.

1975ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் கருணாநிதி தங்கியுள்ள வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வீட்டை அளக்க வேண்டும் என கூறியபோது, “உங்களை இங்கு அனுப்பியவர் எம்ஜிஆர்தான். அவருக்கு தெரியாதா, நான் இந்த வீட்டை 1956லேயே வாங்கிவிட்டேன்” என்று கூறி சோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு டீ போட சொல்லிவிட்டு முரசொலி மாறன் வீட்டிற்குச் சென்று கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியவர்தான், கருணாநிதி.

ஏராளமான சோதனைகளை பார்த்தவர்கள் திமுகவினர், இந்த சிபிஐ, ஈடி, ஐடி எல்லாம் எம்மாத்திரம். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால், இதுவரையில் மத்திய பாஜக அரசு அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவை தன் கையில் வைத்திருந்தது, பாஜக.

எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ எங்கள் தலைவர் கிடையாது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் எங்கள் தலைவர். பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கரோனா காலக்கட்டத்தில் வசூல் செய்த 32 ஆயிரம் கோடிக்கு மத்திய மோடி அரசு இதுவரையில் கணக்கு காட்டவில்லை.

கரோனா பெயரைச் சொல்லி கொள்ளையடித்தவர்கள் பாசிச பாஜகவினர். ஆனால், எங்கள் முதலமைச்சர் மோடியைப் போன்றவர் அல்ல. சட்டமன்றத்தில் கரோனா காலத்தில் வசூலான நிதிக்கு வெள்ளையறிக்கை வெளியிட்டு அனைத்தையும் வெளிப்படையாகச் சொன்னவர் நம் முதலமைச்சர்.

மேலும், மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது. அதனை எதிர்க்கவே பெங்களூரில் 24 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. மேலும், இது உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில்லை. பேரன் தனது தாத்தா பாட்டிக்கு செய்யும் கடமை” என பேசினார்.

இந்த பொற்கிழி வழங்கும் விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்னையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' - கம்யூனிஸ்ட் கட்சி

ABOUT THE AUTHOR

...view details