திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் முல்லையைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). நண்பர்களாகிய இருவரும், திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு தினமும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம்.
அதேபோல், இன்று (ஜன.4) காலை இருவரும் தியான வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்திற்கு முன்பு சென்றதால் அதை முந்திச் செல்ல எண்ணிய இளைஞர்கள், அதிவேகமாக சென்று உள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக, அதே சாலையில் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் வந்த அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.