தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

VIDEO;வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - விரட்டி பிடித்த மக்கள் - திருட்டு

ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்கள்
வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்கள்

By

Published : Nov 23, 2022, 1:19 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபரிடம், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது அந்நபர் கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள், வழிப்பறியில் ஈடுப்பட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற இளைஞர்களை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்கள்

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இரு இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த தினகரன் மற்றும் சந்துரு என்பதும், அவர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்த 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரு இளைஞர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details