திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (65). இவரும், வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இவரது சகோதிரியான வசந்தா (64) என்பவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டின் காரிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
பின்னர், ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற்றுக் கொண்டு, ஜே.பி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவள்ளூர் செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்று உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, அவ்வழியாக சென்ற மங்களூரு விரைவு ரயில் மோதி சகோதரிகள் இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.