மத்தியப் பிரதேசம், இந்தூரிலிருந்து சென்னைக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் இருசக்கர வாகன உதிரி பாகங்களை, கண்டெய்னர் லாரி மூலம் மஹமூத் என்ற ஓட்டுநர் ஏற்றிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, செட்டியப்பனூர் என்ற இடத்தில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை தூக்கம் வந்ததன் காரணமாக சாலை ஓரம் வண்டியை நிறுத்தி விட்டு மஹமூத் உறங்கியுள்ளார்.
லாரி ஓட்டுநர் உறங்கிய நேரத்தில் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகன உதிரி பாகங்கள் திருட்டு! - theft news
திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே ஓட்டுநர் உறங்கிகொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓரே இடத்தில் லாரி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ.02) காலை எழுந்து பார்த்தபோது லாரியின் பூட்டு உடைக்கப்பட்டும், கதவு திறந்த நிலையில் இருந்ததையும் கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து லாரியினுள் சோதித்து பார்த்தபோது சுமார் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் வாணியம்பாடி கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வாணியம்பாடி கிராமியக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.