தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.38.5 லட்சம் மோசடி; இருவர் கைது! - Government job cheater arrested by ambur area

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.38.5 லட்சம் மோசடி செய்ததாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆம்பூர்
ஆம்பூர்

By

Published : Oct 16, 2020, 2:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் அழிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்பவரும், அத்திமாகுலப்பல்லி பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் கடந்த ஆறு மாத காலமாக மக்கள் உரிமைகள் இயக்கம் என்ற பெயரில் அலுவலகம் ஒன்று நடத்திவருகின்றனர்.

இந்த இயக்கத்தில் மாவட்டம் மற்றும் மாநில பொறுப்பு வழங்கி உறுப்பினர்களைச் சேர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்கள் மூலமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வருவாய்த் துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மோட்டார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 21பேரிடம் ரூ.38.5 லட்சம் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (அக். 15) அந்த அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறுவதாகவும், அதற்காக திருப்பத்தூர் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து முதற்கட்டமாக 9 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வந்திருப்பதாக வட்டாட்சியர் பத்மநாபன் அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான நகர காவல் துறையினர் சென்று விசாரணைமேற்கொண்டனர். விசாரணையில் போலியாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவருவது உறுதிசெய்யப்பட்டு அழிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் உரிமை கழகம் நிறுவனர் லிவிங்ஸ்டன் அதற்கு உடந்தையாக இருந்த அத்திமாகுலப்பல்லி பகுதியைச் சேர்ந்த சுதாகர் உள்ளிட்ட இரண்டு பேரைக் கைதுசெய்து ஆம்பூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் இவர்கள் பயன்படுத்திவந்த ஆவணங்கள், கணினி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அலுவலகமும் வட்டாட்சியரால் சீல்வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details