திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உடையராஜபாளையம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக். 2) அதிகாலை ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை அவ்வழியே சென்ற லாரி ஓட்டுநர்கள் மீட்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மோதியது.
பகீர் வீடியோ... ஆம்பூர் அருகே கோர விபத்து... மீட்க சென்ற லாரி ஓட்டுநர்களுக்கு நடந்த விபரீதம்... - ஆம்பூர் அருகே கோர விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆட்டோ ஓட்டுநரை காப்பாற்ற முயன்ற லாரி ஓட்டுநர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 2 லாரி ஓட்டுநர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆரணி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், மற்றொருவர் சீனிவாசன் என்பதும் தெரியவந்தது இந்த விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதையல் ஆசையில் விவசாயி நரபலி... வாட்ச்மேன் கொடுத்த பகீர் வாக்குமூலம்....