திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கர்நாடக எல்லைப்பகுதியான, தும்கூர் குடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மது-அம்பிகா தம்பதியரின் குழந்தைகள் பத்மா (10), விஜய் (6). இவர்கள் இருவரும் வாணியம்பாடி அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது. பாட்டி முனியம்மா, அத்தை மஞ்சு ஆகியோர் குழந்தைகளை வேலை செய்யச் சொல்லி, சித்ரவதை செய்ததால் குழந்தைகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய பிஞ்சுக் குழந்தைகள் எங்கே செல்வது என்று தெரியாமல், வாணியம்பாடி அடுத்த செக்குமாடு பகுதியில் உள்ள உணவகம் அருகே சுற்றி திரிந்துள்ளனர். பசியால் சுற்றித் திரிந்த குழந்தைகளைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து அக்குழந்தைகள் பத்மா, விஜய் ஆகிய இருவரையும் காவல் துறையிடம் பொதுமக்கள் விட்டுச்சென்றனர்.