திருப்பத்தூர் மேற்கு ரயில்வே காலனியில் வசிப்பவர் அனுப் சிங்(30). இவர் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 07) அனுப் சிங், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள தின சந்தைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
காய்கறிகள் வாங்கிவிட்டு திரும்பிய பிறகு, அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், திருப்பத்தூர் நகரப்பகுதியில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.