திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அவரது மனைவி ஷிவாலிகா ஆகிய இருவரும் தங்களது இரண்டாவது கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மூக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற நெற்பயிர் நடும் நிகழ்ச்சியில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அவரது மனைவி இருவரும் கலந்துகொண்டு, உழவர்களுடன் நிலத்தில் இறங்கி நாற்று நட்டனர்.