தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டம் ! - மலைவாழ் மக்கள் போராட்டம்

திருப்பத்தூர்: சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக கரும்பு கொடி ஏந்தி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

tribal people protest
tribal people protestc

By

Published : Nov 21, 2020, 1:24 PM IST

திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜவ்வாது மலை பகுதியிலுள்ள புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு போன்ற ஊராட்சி பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக முறையான எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை(நவ.16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைவாழ் மக்கள் போராட்டம்

இந்நிலையில், ஐந்தாவது நாளாக கருப்புக் கொடி ஏந்தி அப்பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று (நவ.21) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாடத்திட்டத்தில் தற்காப்பு பயிற்சி - மோடிக்கு மாணவி கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details