தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து சாய்ந்த மரங்கள் .. கொட்டும் மழையில் அகற்றும் பணியில் ஊழியர்கள்

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால், வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து இரண்டு மரங்கள் சாந்தன. கொட்டும் மழையில் மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து சாய்ந்த மரங்கள்
அடுத்தடுத்து சாய்ந்த மரங்கள்

By

Published : Dec 10, 2022, 5:06 PM IST

அடுத்தடுத்து சாய்ந்த மரங்கள்

திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாந்து, மின் கம்பிகள் அறுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

அந்த வகையில் வாணியம்பாடியில் பெய்து வரும் கனழையால், செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் அடுத்தடுத்து இரண்டு புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த கடை மீது சாய்ந்தது. இதனால், வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

புயல் தாக்கத்தால் சாய்ந்த மரங்களைக் கொட்டும் மழையில் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புயல்: காற்றின் வேகம் தாங்காமல் சரிந்து விழுந்த காவல்துறையின் செல்போன் டவர்

ABOUT THE AUTHOR

...view details