தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் - Trains stopped here and there

வாணியம்பாடியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

வாணியம்பாடியில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்
வாணியம்பாடியில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

By

Published : Aug 26, 2022, 12:31 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் பகுதியில், இன்று (ஆகஸ்ட் 25) காலை ரயில்வே ஊழியர் கணேஷ் ராஜ் தண்டாவள கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு கணேஷ் ராஜ் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

இதனால் சென்னையிலிருந்து வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் பிருந்தவான் எக்ஸ்பிரஸ் பச்சகுப்பம் ரயில் நிலையத்திலும், டபுள் டக்கர் ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையத்திலும், கோவை எக்ஸ்பிரஸ் வாணியம்பாடி ரயில் நிலையிலத்திலும் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details