ஆடல், பாடல், நகைச்சுவை என அனைத்திலும் மக்களை மகிழ்விக்கும் கலையறிந்த நாட்டுப்புற கலைஞர்களை செய்வதறியாது ஸ்தமிக்கவைத்தது கரோனா நெருக்கடி. தை மாதம் முதல் ஆடி மாதம் வரையிலான காலம்தான் நாட்டுப்புற கலைஞர்களின் திருவிழாக் காலம்.
இந்த குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் வருமானம்தான் ஆண்டு முழுவதும் அவர்களின் வாழ்க்கைக்கு அச்சாணியாக இருக்கும். இந்நிலையில் கரோனாவால், முன்பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் ரத்தாகிவிட்டன. சொற்ப வருமானமும் போய்விட்டதால், தங்களை காக்க வேண்டியது அரசின் கடமை என இறைஞ்சுகின்றனர், இக்கலைஞர்கள்.
நாட்டுப்புறக் கலைஞர்களில் 20 விழுக்காடு பேர் (தமிழ்நாடு) மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை கிடைக்கும். இந்நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் அரசு உதவியளிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
ஐந்து மணி நேர நடனம்...நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்: செவிசாய்க்குமா அரசு? நலவாரியத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், அதை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரியத்தில் இல்லாத நாட்டுப்புற கலைஞர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும், 60 வயதை கடந்த நாட்டுபுற கலைஞர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுபுற கலைஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து 5 மணி நேரம் தொடர் நடனமாடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: புகை நமக்கு பகை: சிகரெட்டை சரியாக அணைக்காததால் தீ விபத்து!