திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மாதனூர் - குடியாத்தம் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த புளிய மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 19) காலை மாதனூர் பகுதியில் சாலையோரம் இருந்த பழமைவாய்ந்த புளிய மரம் ஒன்று முறிந்து மாதனூர் - குடியாத்தம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது.
திருப்பத்தூரில் சாலையின் குறுக்கே சரிந்த ஆலமரத்தால் போக்குவரத்து பாதிப்பு - latest tamil news
திருப்பத்தூரில் சாலையின் குறுக்கே ஆலமரம் முறிந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் முறிந்து விழுந்த ஆலமரத்தால் போக்குவரத்து பாதிப்பு
நீண்ட நேரமாகியும் மரம் அப்புறப்படுத்தப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என்று அனைவரும் அவதிக்குள்ளாகினர். அதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை கொண்டு, முறிந்து விழுந்த புளியமரத்தை அதிகாரிகள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து