திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத்தொடர் ஏலகிரி மலை. இந்த மலையில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக இங்குப் படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்கா உள்ளன. தொடர் விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.