திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள வண்ணாந்துறை கனாற்றின் குறுக்கே, 45 மீட்டர் தொலைவுக்கு இரண்டரை அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூரில் தடுப்பணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதலைமச்சர்! - திருப்பத்தூர் ஆட்சியர்
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
இதனையடுத்து கனாற்றின் அருகே தடுப்பணை அமைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் சிவனருள், ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் , ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:பாம்பாற்றில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டிலான தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்