தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்பது வெறும் கனவு மட்டுமே!' - election 2021 news

திருப்பத்தூர்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

TN CM slams DMK Leader MK Stalin news
TN CM slams DMK Leader MK Stalin news

By

Published : Feb 10, 2021, 2:22 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மூன்று தினங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் இன்று (பிப். 10) காலை பரப்புரை செய்தார்.

அதில், “திமுக ஆட்சியில் இருந்தபோது மு.க. ஸ்டாலினும், அவரது தந்தையும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்காமல், தற்போது பொதுமக்களிடம் சென்று குறைகளைக் கேட்டுவருகிறார்.

திமுக ஆட்சியில் செய்யாததை இப்போது எப்படிச் செய்வார். திமுகவினர் ஆட்சியில் இருக்கும்போது நாட்டு மக்களுக்காகச் சிந்திக்காமல், வீட்டு மக்களுக்காகச் சிந்தித்து ஆட்சி நடத்தினார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை

மு.க. ஸ்டாலின் மூன்று மாதத்தில் முதலமைச்சர் ஆவார் என கனவு மட்டுமே காண முடியும். ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் திமுகவாக இருந்தாலும், அதிமுக அரசுதான் ஆம்பூர் நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றிவருகிறது.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம் எனச் சிலர் நினைக்கிறார்கள், அவர்களின் எண்ணம் நிறைவேறாது” என்றார்.

இதையும் படிங்க...ஸ்டாலினுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2வது நோட்டீஸையும் ரத்துசெய்தது நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details