திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதிகை தனியார் பொறியியல் கல்லூரியில் நாளை(மார்ச்.4) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பட்டதாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "வருகின்ற 4.3.2023 சனிக்கிழமை அன்று 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெற உள்ளது.
மெகா வேலைவாய்ப்பு - இளைஞர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு! - மெகா வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் நாளை (மார்ச்.4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Etv Bharat
5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆகவே 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்துள்ள அனைத்து இளைஞர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு" திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கொச்சின் ஹவுஸ் காவல் குடியிருப்பு விவகாரம் - 6 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்!