தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலன் இறந்த துயரத்தில் பள்ளி மாணவி தற்கொலை - ஆம்பூர் செய்திகள்

காதல் விவகாரத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, துக்கத்தில் காதலியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupattur Love couples committed suicide
Tirupattur Love couples committed suicide

By

Published : Dec 21, 2021, 8:38 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டை சேர்ந்த இளைஞர் ரமணா (22). இவர், எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (16) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 19) மாலை காதல் விவகாரத்தில் பிரியங்கா தேவிக்கும், ரமணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் உயிரிழப்பு

இதனால், மனமுடைந்த ரமணன் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதலன் ரமணா இறந்தது குறித்து, தகவல் அறிந்த பிரியங்கா தேவி வடபுதுப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை வேண்டாம்

இதுகுறித்து, தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ரமணனின் உடலையும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா தேவியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருமல் மருந்து குடித்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details