தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியின் போது மது அருந்தியதாக புகார்! சிறைக் காவலரின் வீடியோ வைரல்! - பணியின் போது மது அருந்தும் தலைமை காவலர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிறைச்சாலையில் தலைமை காவலர் ஒருவர் பணியின் போது மது அருந்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாணியம்பாடி சிறை காவலர்
வாணியம்பாடி சிறை காவலர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 9:59 PM IST

பணியின் போதே மது அருந்தும் காவலர்.. வைரலாகும் வீடியோ!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையானது அமைந்துள்ளது. இந்த சிறையில் தற்போது 35 கைதிகள் உள்ள நிலையில், 1 துணை கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் 10 காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் ஜெயக்குமார் என்பவர், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் பெறுவதாகவும், அவர்களை இரவு நேரங்களில் மதுபாட்டில்களை வாங்கி தர கூறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தலைமைக் காவலர் ஜெயக்குமார் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணியில் இருக்கும் போதே அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:"உரசி பார்க்கும் குணம் இல்லை, ஒதுங்கி போகும் குணம்" - அன்பில் மகேஷ் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details